Wednesday, 25 September 2013

வணக்கம் நண்பர்களே


வணக்கம் நண்பர்களே நான் மின்னியல் துறையில் 33ஆண்டுகளாக பணி செய்து வருகிறேன் மின்னியல் பொருட்களை எளிய தமிழில் மிகவும் சுலபமாக கையாளும் வண்ணம் பெயரகொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த மின்னியல் பொருள் எவ்வாறு நமக்கு பயன் தருகிறதோ அதை வைத்து அதற்க்கு தமிழ் பெயர் கொடுத்துள்ளேன் ஆங்கிலத்திலும் இதன் செயல் பாடு தெரிந்து தான் பெயர் கொடுத்து உள்ளார்கள் உதாரணம கண்டன்சர் என்பது மின்சாரத்தை தன்னுள்அடக்கி அல்லது தேக்கி வைத்து கொள் என்று அர்த்தம் சரி டயோட் இதற்க்கு அனோடு மற்றும் கேதோட் இரு புலம் இருப்பதால் இதனை சுலபமாக சொல்ல வேண்டும் என்பதற்காக இதனை இருபுலம் என்று பெயர் கொடுத்தேன் மற்றும் சில மின்னியல் பொருட்களுக்கு கண்டு பிடித்தவரின் பெயரையே வைத்து உதாரணம் ஜென்னர் டயோட் இதுவும் இருபுல குடும்பத்தை சார்ந்தது இதன் செயல பாடு மின்சாரத்தை நிலை படுத்தி கொடுப்பது இதனை ஆங்கிலத்தில் வோல்டேஜ் ரேகுலேடட் டயோட் என்பார்கள் அனால் அதனை கண்டு பிடித்தவர் பெயர் ஜென்னர்என்பதால் அதனையே பெயராக கொடுத்து உள்ளார்கள் இன்று மின்னியல் அளவீடுகள் அனைத்தும் கண்டு பிடிப்பாளர்கள் பெயரிலேயே அழைக்க படுகிறது அதனால் தமிழில் ஆழ்ந்து பெயர் இடாமல் மிகவும் சுலபமாக வழக்கு பெயராக மாற்றம் தர வேண்டும் என்பதே என் ஆசை இதை தமிழ் கற்ற சான்றோர்கள் ஏற்று கொள்வார்கள்

No comments:

Post a Comment