SMART SENSOR
"ஆன் செய்யுங்க மறந்துடுங்க"
ஆம் இதோ மின்னணுவியல் ராணுவவீரன்
பலவழிகளில் உதவும் ஸ்மார்ட் சென்சார்
" Motion Sensor "
இது உங்களுக்கு பணத்தை மின்சாரத்தை
தண்ணீரை மிச்சபடுத்தி கொடுக்கும் சாதனம்
அதே நேரத்தில் கொள்ளையர்களிடம் இருந்து
நம்மை எந்தவித சேதமின்றி காப்பாற்ற கூடிய
ஸ்மார்ட் சென்சார் சாதனம்
இது ஒருஅசைவு கண்காணிப்பு சாதனம் ஆகும்
இதன் முன் 7மீட்டர் தூரத்தில் வருபவரின் அசைவை
வைத்து செயல் பட ஆரம்பிக்கும் இதில் இருந்து
வெளிப்படும் இன்ப்ரா கதிர்கள் மனிதனின் வெப்பத்தை
கண்டு பிடித்து அதன் மூலம் மின்சரகருவிகளை
இயக்குகிறது இதன் பலனாக நாம் வீடு அலுவலகம்
வங்கிகள் கடைகள் மற்றும் பல இடங்களில் கொள்ளை
கும்பல்களிடமிருந்து எவ்வித சேதாரமின்றி
பொருட்களை உடமைகளையும் பாதுகாத்து
கொள்ளலாம்7மீட்டர் தூரத்தில் யார் வந்தாலும்
உடனடியாக தானாக விளக்குகள் எரியும் பின் அதில்
அமைத்துள்ள அலாரம் ஒலி எழுப்பி எச்சரிக்கும்
இதை கேட்டதும் கொள்ளையர்கள் ஓடி
விடுவார்கள் மற்றும் வீடுகளில் இரவு நேரங்களில்
தூங்கிய பின் இயற்க்கை உபாதையின் காரணமாக
எழும்போது விளக்கும் தானாக எரியும் அதன் பின்
வந்து தூங்கும் போது விளக்கு தானாக அணையும்
இதை வீட்டில் எங்கு வேண்டுமானாலும்
அமைத்து பயன்படுத்தலாம் இது குழந்தைகள் முதல்
முதியவர்கள்வரை அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்
அதே போல் குளியல் அறைக்கு மிகவும் ஏற்றது சவர்களை
பயன் படுத்தி குளிப்பவர்கள் அதிகமாக தண்ணீரை
வீணடிக்கும் வாய்ப்பு உள்ளது தண்ணீரை திறந்து
வைத்து சோப்பு போடும்போது தண்ணீர் வீணாகி
கொண்டிருக்கும் இந்த கருவியை அமைப்பதின்
மூலம் சவருக்கு நேராக வரும்போது மட்டும் தண்ணீர்
விழும் அதில் இருந்து விலகினால் தண்ணீர் நின்று
விடும் இதனால் தண்ணீர் வீணாவது தவிர்க்கபடும்
டாய்லெட்களில் சிலநேரங்களில் தண்ணீர் ஊற்றாமல்
வந்து விடுவார்கள் இதனால் சுற்று சூழல்மாசு ஏற்ப்படும்
இதனையும் இந்த கருவி மூலம் நிவர்த்தி செய்யலாம்
மற்றும் தெரு விளக்குகள் தொடர்ந்து இரவு நேரங்களில்
எரிந்து மின்சாரம் விரயமாகி கொண்டு இருக்கும் இந்த
கருவியை அமைப்பதின் மூலம் ஆட்கள் நடமாடும்போது
மட்டும் விளக்குகள் எரியும் இதனால் மின்சாரம் மிச்சம்
ஆகும் அதே போல் அபார்ட்மெண்ட் களில் படிகளிலும்
வாகனங்கள் நிறுத்தும் பேஸ்மென்ட்,பாத்ரூம் ஸ்டோர்கள்,
போன்ற இடங்களில் அமைத்து மின்சாரத்தையும்
பணத்தையும் மிச்ச படுத்தலாம் இந்த கருவி இயங்க
5வோல்ட்DC முதல் 12வோல்ட்DC மின்சாரம் இருந்தால்
போதும் இதன் மூலம் மின்சார கருவிகளை
இயங்க வைக்கலாம் ........................................நன்றி
ஆசிரியர் லி.பூபதிராஜ்
No comments:
Post a Comment